உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தி.மு.க., அரசின் ஊழல்களால் கறை படிந்த தமிழகம்; அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு

தி.மு.க., அரசின் ஊழல்களால் கறை படிந்த தமிழகம்; அ.தி.மு.க., மருத்துவரணி குற்றச்சாட்டு

மதுரை; ''ஆயிரம் கோடியில் கழிப்பறை சுத்தம் செய்வதில் ஊழல், மதுரை உட்பட அனைத்து மாநகராட்சியிலும் நடந்த ஊழல்களால் இந்தியாவிலேயே தமிழகம் கறைபடிந்து உள்ளது. இதையெல்லாம் சாதனையாக ஸ்டாலின் கூற முடியுமா'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கிண்டலாக கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: பழனிசாமியின் எழுச்சி பயணத்தை கண்டு முதல்வர் ஸ்டாலின் துாக்கமின்றி தவித்து வருகிறார். வாய்க்கு வந்ததைப் பேசி மக்களை திசை திருப்ப நினைக்கிறார் அது தோல்வியில்தான் முடிகிறது. சுதந்திர தின விழாவில் இந்தியாவிலே தமிழகம் வளர்ச்சி அடைந்திருப்பதாக ஸ்டாலின் கூறினார். ஆனால் பழனிசாமி ஆட்சியில் செய்த திட்டங்களை எல்லாம் ஸ்டிக்கர் ஒட்டி அதை தான் செய்த சாதனையாக ஸ்டாலின் சொல்லி வருகிறார். கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் முன்னேற்றம் இல்லை. ஜெ., ஆட்சியிலும், பழனிசாமி ஆட்சியிலும் ஆண்டுக்கு ரூ.68 ஆயிரம் கோடி மக்களுக்காக மானியமாகவும், இலவசத் திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டது. முதியோர், ஆதரவற்றோருக்குஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதுபோன்று அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் 20 சதவீதம் குறைத்து விட்டனர். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் கட்டுமான பொருட்கள் 20 சதவீதம் உயர்வு, சமையல் பொருட்கள் 30 சதவீதம் உயர்வு உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் தமிழகம் வாங்கிய கடன் தொகை ரூ.5 லட்சம் கோடி. ஆனால் இந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் தி.மு.க., அரசு வாங்கிய கடன் நாலரை லட்சம் கோடி ரூபாய். இன்றைக்கு போதை பொருட்களால் 12 சதவீத மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஆயிரம் கோடியில் கழிப்பறை சுத்தம் செய்வதில் ஊழல், மதுரை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சி ஊழல் நிகழ்வால் இந்தியாவிலேயே தமிழகம் கறைபடிந்து உள்ளது. இதையெல்லாம் சாதனையாக ஸ்டாலின் கூற முடியுமா. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ