உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊழல் செய்வதிலும் தமிழகம் முதலிடம்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

ஊழல் செய்வதிலும் தமிழகம் முதலிடம்: அ.தி.மு.க., குற்றச்சாட்டு

மதுரை; ''கடன் சுமையில் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது. தற்போது ஊழல் செய்வதிலும் முதன்மை இடத்தில் உள்ளது என்ற அவப்பெயரை ஸ்டாலின் உருவாக்கிவிட்டார்'' என அ.தி.மு.க., மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் கூறினார். மதுரையில் அவர் கூறியதாவது: இந்தியாவில் கடன் வாங்கும் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சியில் கமிஷன், கரப்ஷன், கலெக்சன் நடந்து வருகிறது என அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி நாள்தோறும் மக்களுக்கு அம்பலப்படுத்துகிறார். இதற்கு பதில் கூற முடியாமல் ஸ்டாலின் மவுனம் காத்து வருகிறார். பொங்கல் பரிசு, முட்டை கொள்முதலில் ஊழல் நடந்தது. டாஸ்மாக் மூலம் ஆண்டுதோறும் ரூ.5400 கோடி அளவில் ஊழல் செய்கிறார்கள். அதேபோல சென்னையில் ரூ.5000 கோடிக்கு மழை வடிகால் பணியை செய்கிறோம் என்றுக்கூறி அதில் பல கோடியை கொள்ளை அடித்தார்கள். மதுரை மாநகராட்சியில் வரி முறைகேட்டில் ரூ.250 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. கடன் சுமையில்தான் தமிழகம் முதன்மை இடத்தில் உள்ளது. தற்போது ஊழல் செய்வதிலும் முதன்மை இடத்தில் உள்ளது என்ற அவப்பெயரை ஸ்டாலின் உருவாக்கிவிட்டார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !