உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாய் குறுக்கே வந்ததால் ஆசிரியர் பலி

நாய் குறுக்கே வந்ததால் ஆசிரியர் பலி

திருமங்கலம்: சிவகங்கை மாவட்டம் ஏனாதி கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ராமமூர்த்தி 42. மதுரை மேல அனுப்பானடியில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். உடன் பணியாற்றும் ஆசிரியரின் தாயார் உயிரிழந்த நிகழ்ச்சியில் இவரும் மற்றொரு ஆசிரியர் இருதயராஜ் 45, என்பவரும் எம்.கல்லுப்பட்டிக்கு டூவீலரில் சென்று விட்டு திரும்பினர். தும்மக்குண்டு கரிசல்பட்டி விலக்கு அருகே வரும்போது திடீரென குறுக்கே வந்த நாய் மீது டூ வீலர் மோதியது. இதில் இருவரும் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த ராமமூர்த்தி மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். நேற்று பலியானார். சிந்துபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ