உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஆசிரியர் தினவிழா

 ஆசிரியர் தினவிழா

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில் ஆசிரியர் தினவிழா செயலாளர் இக்னேசியஸ் மேரி தலைமையில் நடந்தது. முதல்வர் பாத்திமா மேரி முன்னிலை வகித்தார். இணைப் பேராசிரியை மீனாகுமாரி வரவேற்றார். திறன் மேம்பாட்டு மண்டல தலைவர் அரவிந்த் சிறப்புரையாற்றினார். மூத்த பேராசிரியைகள் தமிழ்ச்செல்வி, கலா, ராஜேஸ்வரி, அலுவலர்கள் ஆண்டனிராஜ், நிர்மலா, 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்தோர் கவுரவிக்கப்பட்டனர். முதல்வர் பாத்திமா மேரிக்கு 'கல்விக் காவலர்' விருது, இணைப் பேராசிரியை ஏஞ்சல், உதவி பேராசிரியை சுகன்யாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. மாணவப் பேரவை நிர்வாகிகள் ேஷய்கா, ஜாய் மெர்சி, ஏஞ்சலின் ரோஸ் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி