உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உள்ளதை சொல்லுங்க... உள்ளத்தை லேசாக்குங்க... இலவச கவுன்சிலிங் பெறலாம்

உள்ளதை சொல்லுங்க... உள்ளத்தை லேசாக்குங்க... இலவச கவுன்சிலிங் பெறலாம்

மதுரை: மதுரை செல்லமுத்து டிரஸ்ட் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடத்தப்படும் 'ஸ்பீக் டூ அஸ்'அமைப்பின் நிகழ்ச்சி நடந்தது.தன்னார்வலர் ஸ்ரீவித்யா பேசியதாவது: கொரோனா காலத்தில் தனிமை, பயம், மனஅழுத்தம் காரணமாக டிரஸ்ட் நிறுவனர் டாக்டர் சி.ராமசுப்பிரமணியன் வழிகாட்டுதல்படி ராஜாராம், குருபாரதி இந்த அமைப்பை தொடங்கினர். 4 ஆண்டுகளாக இலவச ஹெல்ப்லைன் மூலம் மக்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது.சிலர் முதல் அழைப்பிலேயே மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவர். கவுன்சில் தேவைப்படுவோருக்கு யாரை அணுகுவது என ஆலோசனை கூறுகிறோம். இலங்கை, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கும் சேவை வழங்குகிறோம். மாணவர்களின் தேர்வு பயம், உருவக்கேலி போன்ற பல சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளன. எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல. அந்த எண்ணத்தை கைவிட செய்வதே எங்கள் குறிக்கோள். துாக்கமின்மை, மனஅழுத்ததிலிருந்து விடுபட பயிற்சி கொடுக்கிறோம். உடல்நலன் போல மனநலனிலும் அக்கறையுடன் இருப்பது அவசியமாகிறது என்றார்.மனநல ஆலோசனை பெற 93754 93754 என்ற இலவச எண்ணில் தினமும் காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை