உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏ.டி.எம்.,மில் பயங்கர தீ

ஏ.டி.எம்.,மில் பயங்கர தீ

மதுரை: மதுரை கீரைத்துறை ரயில்வே கேட் அருகில் கனரா வங்கி ஏ.டி.எம்., மில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. புதுமாகாளிப்பட்டி ரோடு - பாம்பன் ரோடு சந்திப்பு அருகே வாடகை கட்டடம் ஒன்றில் ஏ.டி.எம்., மையம் உள்ளது. நேற்று காலை 7:00 மணியளவில் தீப்பிடித்து 'ஏசி', பணம் எடுக்கும் இயந்திரம், மின்பேட்டரிகள், வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு டூ வீலர்கள் எரிந்தன. இதில் இயந்திரத்தில் இருந்த பணமும் எரிந்தது. இதன் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தீயணைப்பு அலுவலர் வெங்கட்ரமணன், கூடுதல் அலுவலர் திருமுருகன், அனுப்பானடி நிலைய அலுவலர் அசோக்குமார், சிறப்பு நிலை அலுவலர் கணேஷ் தலைமையிலான வீரர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவாமல் அணைத்தனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை