மேலும் செய்திகள்
தினமலர் இணைநிர்வாக ஆசிரியருக்கு பாராட்டு
14-Apr-2025
மதுரை : மதுரை மாவட்ட தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) சார்பில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. செனாய்நகரில் துவங்கிய நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் பக்தவச்சலம் தலைமை வகித்தார். மாநில மூத்த துணைத் தலைவர் இல.அமுதன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ரமேஷ் துவக்கி வைத்தார். மதுரை கல்லுாரி வாரிய பொருளாளர் ஆனந்த ஸ்ரீனிவாசன், மாவட்ட பொறுப்பாளர் கோதண்டராமன், ஜெய்ஹிந்த்புரம் கிளை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சட்ட ஆலோசகர் அருண்குமார், இளைஞரணி செயலாளர் மீனாட்சிசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
14-Apr-2025