உண்டியல் காணிக்கை ரூ. ஒரு கோடி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் பணம் நேற்று கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், இருக்கன் குடி மாரியம்மன் கோயில் உதவி கமிஷனர் இளங்கோ, ஆய்வர் இளவரசி முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ. ஒரு கோடியே ஐந்து லட்சத்து ஆயிரத்து 654, தங்கம் 201 கிராம், வெள்ளி 3 ஆயிரத்து 902 கிராம் இருந்தது. கோயில் கண்காணிப்பாளர்கள் சுமதி, சத்திய சீலன், ரஞ்சனி, பணி யாளர்கள், பக்தர்கள் பேரவையினர் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.