உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பைக்குகள் எரிந்தன

பைக்குகள் எரிந்தன

மதுரை; மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் எதிரே தனியார் வாகன காப்பகம் உள்ளது. இங்கு தத்தனேரி எலக்ட்ரீசியன் செல்வம்பாண்டி தனது எலெக்ட்ரிக் பைக்கை நிறுத்திவிட்டு வெளியூர் சென்றார். இந்நிலையில் நேற்று மதியம் அவரது பைக் திடீரென எரிந்தது. தீ பரவி அருகில் நிறுத்தியிருந்த பைக் பாதி எரிந்தது. மற்றொரு பைக்கில் லேசாக தீப்பிடித்தது. தல்லாகுளம் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவால் தீப்பிடித்ததா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ