மேலும் செய்திகள்
தினமலர் செய்தி: மார்க்கெட் 'கிளீன்'
12-Dec-2024
நகராட்சி அலுவலகம் முற்றுகை
10-Dec-2024
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் தமிழக அரசின் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.இதில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உசிலம்பட்டி தாலுகா முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், சுகாதார மையங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கலெக்டர், டி.ஆர்.ஓ., சக்திவேல், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, துணை கலெக்டர் பயிற்சி அனிதா முன்னிலையில் ஆய்வு குறித்து விளக்கக்கூட்டம் நடந்தது. கிராமங்களில் பழுதடைந்த பள்ளி உள்ளிட்ட அரசு அலுவலக கட்டடங்கள், அடிப்படை வசதிகள், பஸ் போக்குவரத்து, ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள் உள்ளிட்டவற்றில் குறைபாடுகள், தேவைப்படும் அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். நகராட்சி தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் தேன்மொழி, கவுன்சிலர்கள் ஆகியோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 7.85 ஏக்கர் சந்தை பகுதியை நகராட்சி வசம் ஒப்படைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தப்பகுதியில் உசிலம்பட்டி பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிக்கு தேவையான ஒரு ஏக்கர் நிலமும் வருகிறது.ஒன்றியக்குழு தலைவர் ரஞ்சனி சுதந்திரம் இதனை நகராட்சி வசம் ஒப்படைக்க தடைகோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பஸ்ஸ்டாண்ட் விரிவாக்கப்பணிகள் தாமதமாகிறது. மேற்படி வழக்கின் மீது உரிய உத்தரவு பெற நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்து இருந்தனர்.
12-Dec-2024
10-Dec-2024