கப்பலுார் டோல்கேட் பகுதியில் மின்னொளியில் ஜொலிக்கும் ரோடு
திருமங்கலம்: திருமங்கலம் கப்பலுார் டோல்கேட்டை இரவு நேரத்தில் கடந்து செல்லும் வாகனங்கள, டோல்கேட் அருகில் காத்திருக்கும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காகவும், இரவு நேரத்தில் வாகனங்கள் தெளிவாக தெரிவதற்காகவும் டோல்கேட்டில் இருந்து 500 மீட்டர் தூரம் வரை ரோட்டின் சென்டர் மீடியினில் 20 மீட்டர் உயர கம்பத்தில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.முப்பது அடிக்கு ஒரு மின்கம்பம் என்ற வகையில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் வரும் வாகனங்கள் ஹெட்லைட் இல்லாமல் கூட பயணிக்க முடியும். இதனால் எதிரில் வரும் வாகனங்கள் நின்று இருக்கும் வாகனங்கள் மிக தெளிவாக தெரியும். இதன் மூலம் விபத்துக்கள் தடுக்கப்படும்.இதேபோன்று நான்கு வழி சாலை முழுவதும் அல்லது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதிகள், வனவிலங்குகள் கடந்து செல்லும் பகுதிகளில் மின்விளக்குகளை அமைத்தால் விபத்துகள் தடுக்கப்படுவதோடு வனவிலங்குகள் மீது வாகனங்கள் மோதாமல் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே டோல்கேட் நிர்வாகம் மின்விளக்குகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.