உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமோகூரில் பாலாலயம்

திருமோகூரில் பாலாலயம்

மதுரை: மதுரை அருகே திருமோகூர் காளமேகப்பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஆரம்ப கால யாகசாலை பூஜை நேற்று மாலை 6:00 மணிக்கு துவங்கியது. அமைச்சர் மூர்த்தி, தொழிலதிபர் விஜயானந்த், தி.மு.க., நிர்வாகிகள் ரகுபதி, அழகுபாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் மாரியப்பன், கோயில் உதவி கமிஷனர் வளர்மதி, செயல் அலுவலர் மாலதி ஏற்பாடுகளை செய்தனர். ராஜகோபுரங்கள், விமானங்களுக்கு இன்று (அக்., 24) பாலாலயம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !