உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூகுள் மேப்பில் தேடி திருடியவர்கள் கைது

கூகுள் மேப்பில் தேடி திருடியவர்கள் கைது

வாடிப்பட்டி: வாடிப்பட்டி மேட்டுநீரேத்தான் ரோட்டில் அடுத்தடுத்துள்ள 4 கோயில்களில் ஆடிப்பெருக்கு அன்று இரவு உண்டியலை உடைத்து திருட்டு நடந்தது. இதுதொடர்பாக சமயநல்லுார் வளர் நகர் ரூபன் 31, விக்கிரமங்கலம் வடகாடுபட்டி தமிழழகன் 22, சமயநல்லுார் சேகரை 22, போலீசார் கைது செய்தனர். 4 கிராம் தங்கம், ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. விக்கிரமங்கலம் பகுதியில் மது அருந்தும் இடத்தில் பழகி நண்பர்களான இவர்கள், விசேஷ நாட்களை நோட்டமிட்டு அலைபேசியில் கூகுள் மேப் மூலம் கோயில்களை வரிசைப்படுத்தி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ