உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நடுரோட்டில் மின் கம்பம் தவிக்குது திருமங்கலம்

நடுரோட்டில் மின் கம்பம் தவிக்குது திருமங்கலம்

தி---ருமங்கலம்: திருமங்கலம் விமான நிலைய ரோட்டில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள ரயில்வே கிராசிங்கில் தினமும் 60 முறைக்கும் மேல் கேட் அடைக்கப்படுவதால் அந்த வழியாக கடந்து செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்கின்றனர்.இதையடுத்து ரூ. 33 கோடி மதிப்பீட்டில் அப்பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கான நிலங்கள் முழுமையாக கையகப்படுத்தாத நிலையில் பாலப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. பாலப்பணிக்காக கேட் கீப்பர் அறை எதிர் திசையில் மாற்றப்பட்டது. கேட் 30 அடி வரை நகர்த்தப்பட்டது. அதேசமயம் இங்குள்ள மின்கம்பம் மாற்றப்படவில்லை. தற்போது இந்த கம்பம் ரோட்டின் நடுப்பகுதியில் உள்ளது. இதனால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ