உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி பழனிசாமிக்கு உடன்பாடு உண்டா திருமாவளவன் கேள்வி

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஆட்சி பழனிசாமிக்கு உடன்பாடு உண்டா திருமாவளவன் கேள்வி

மதுரை: கூட்டணி ஆட்சிக்கு உடன்பாடு உண்டா என்பதை பழனிசாமி அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி என அமித்ஷா மட்டும் தான் திரும்ப திரும்ப சொல்கிறார். பழனிசாமி கூட்டணி ஆட்சி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அ.தி.மு.க., வுக்கு கூட்டணி ஆட்சியில் உடன்பாடு உண்டா என்பதை அவர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.அனைத்து மாநிலங்களிலும் பா.ஜ., தான் ஜாதி, மதவாத அரசியல் செய்து வன்முறைக்கு வித்திடுகிறது. டில்லியில் விளையாடியதை போல தமிழகத்திலும் விளையாடலாம் என்பது அமித்ஷா கனவாக இருக்கலாம். ஆனால் இங்கு அது நடக்காது. எதிர்க் கட்சிகள் இன்னும் ஓர் அணியில் திரளவில்லை. பா.ம.க., -தே.மு.தி.க., கூட்டணி குறித்தும் பேசவில்லை.பா.ஜ.,வினர் வடக்கே ராமர், கிருஷ்ணர், விநாயகர், மேற்கில் துர்கா, தமிழகத்தில் முருகனை துாக்கி பிடிக்கிறார்கள். முருக பக்தர்கள் என்று சொன்னவுடன் ஏமாந்து பின்னால் வந்து விடுவார்கள் என நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. இதை 2026 தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு உணர்த்தும்.இங்கு தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான இருதுருவ அரசியல் போட்டி தான் இருக்கும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ