உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் திருப்பாவை பாராயணம்

பள்ளியில் திருப்பாவை பாராயணம்

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிண்டர் கார்டன் குழந்தைகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை கற்று கொடுக்கப்படுகிறது.முதல்வர் சசிரேகா கூறுகையில், ''பிரீ கே.ஜி., எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கும் பாடத்திட்டத்தில் திருப்பாவை, திருவெம்பாவை ஒரு பகுதி இருந்தாலும் மார்கழி முழுவதும் குழந்தைகளுக்கு சிறப்பு வகுப்புகள் மூலம் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இங்கு படிக்கும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை வீடுகளில் பெற்றோரிடம் ஒப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. மூன்று வகுப்பு குழந்தைகளுக்கும் போட்டி நடத்தி பரிசு வழங்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை