உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருவாதிரை திருவிழா

திருவாதிரை திருவிழா

மதுரை : மதுரை அனுப்பானடி நடராஜர் கோயிலில் சுவாமிக்கும், சிவகாமி அம்மனுக்கும் மஹா ஆருத்ரா அபிஷேகமும் சிறப்பு பூஜையும் நடந்தது. இரண்டு சப்பரங்களில் வீதி உலா வந்தனர். ஹோம கும்ப பூஜையை சிவாச்சாரியார்கள் விஜய், முருகன் நடத்தினர். விழாவில் ருத்ர ஞானவேலை ஜோதி ராமநாதன் ஏந்தி வந்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. சுவாமி குதிரை வாகனத்திலும், அம்மன் அலங்கார சப்பரத்திலும் இரவு உலா வந்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி ராஜமாணிக்கம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !