உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவருக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள்

மாணவருக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் திருவள்ளுவர் கல்வி நிறுவனங்கள்

எழுமலை சூலப்புரம் திருவள்ளுவர் கல்வியியல் கல்லுாரி, பாலிடெக்னிக், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கலை, அறிவியல் கல்லுாரி கல்விப்பணியாற்றி வருகின்றன. ஏழை மாணவிகள் பயன்பெற திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித்தொகை தரப்படுகிறது. டி.இ.டி., பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதன் மூலமாக அரசு ஆசிரியர்களாக பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசின் கல்வி உதவித்தொகை பெற்றுத் தரப்படுகிறது. மகளிர் கல்லுாரியில் 12 இளங்கலை பாடப்பிரிவுகளும், 4 முதுகலை பாடப்பிரிவுகளும் பி.ஜி., டிப்ளமோ இன் சானிட்டரி இன்ஸ்பெக்டர் என்ற பாடப்பிரிவும் உள்ளன. இதில் படித்த 6 மாணவிகள் மாநகராட்சி சானிட்டரி இன்ஸ்பெக்டர்களாகி உள்ளனர். மதுரை காமராஜ் பல்கலை தேர்வுகளில் 25 மாணவிகள் தரவரிசை பட்டியலில் இடம்பெற்று கல்லுாரிக்கு பெருமை சேர்த்துள்ளனர். அரசு நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி, டாலி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாலிடெக்னிக் கல்லுாரியில் மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பாடப் பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 25க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் வளாக நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டு 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படுகிறது. மெட்ரிக் பள்ளியில் யோகா, கராத்தே, பரதநாட்டியம், சிலம்பாட்டம, டேக்வாண்டோ, கேரம், ஸ்கேட்டிங், செஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்றுத் தரப்படுகிறது. கிராமப்புற பகுதியில் சிறப்பாக கல்விப் பணியாற்றி பெண்களின் கல்வி இடைநிற்றலை குறைத்து அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர கல்விப் பணி செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ