உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தினமும் ஒரு குறள் படித்துவிட்டு அன்றைய நாளை தொடங்குவேன் அமெரிக்கரான தாமஸ் ஹிட்டோஷி நெகிழ்ச்சி

தினமும் ஒரு குறள் படித்துவிட்டு அன்றைய நாளை தொடங்குவேன் அமெரிக்கரான தாமஸ் ஹிட்டோஷி நெகிழ்ச்சி

மதுரை: ''மொழிபெயர்ப்பு செய்யும் காலங்களில் தினமும் ஒரு குறள் படித்துவிட்டு தான் அன்றைய நாளை தொடங்குவேன்'' என தமிழ் மீது பற்றுகொண்ட அமெரிக்காவைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர் தாமஸ் ஹிட்டோஷி தெரிவித்தார்.மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் இலக்கியம், கலை, கலாசாரம் குறித்த கருத்தரங்கு முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. தாமஸ் தமிழில் பேசியதாவது: தமிழ் கற்ற அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது. எனினும் மொழிபெயர்க்க தோன்றியதில்லை. ஆசிரியர் காமகோடியின் அறிவுரைப்படி தமிழ் எழுத கற்றுக்கொண்டேன். பின் அவ்வையாரின் பாடல்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். பிறகு திருக்குறள் படித்தேன். நிறைய பேர் அதை மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் பெரும்பாலும் உரைகள் தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதில் உள்ள சின்ன சின்ன நடைகளான எதுகை, மோனை உள்ளிட்டவற்றை அப்படியே மொழி பெயர்க்க திட்டமிட்டேன். மொழி பெயர்ப்பில் சவால்கள் நிறைய உள்ளன. நேர்த்தியாக கையாண்டால் அனைத்தும்எளிது. 10 ஆண்டுகள் முயற்சிக்கு பிறகு திருக்குறளை மொழிபெயர்த்தேன். 600 குறள்கள் வரை நினைவில் வைத்துள்ளேன். மொழிபெயர்ப்பு செய்யும் காலங்களில் தினமும் ஒரு திருக்குறள் படித்துவிட்டு தான் அன்றைய நாளை தொடங்குவேன் என்றார். நிகழ்வில் ஆங்கிலத்துறை ஆராய்ச்சி தலைவர் பால் ஜெயக்கர், துறைத் தலைவர் ரவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் வர்கீஸ், பேராசிரியர் எரிக் ஜியார்ஜி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை