த.மா.கா., ஆண்டு விழா
திருப்பரங்குன்றம்: நவ.29-: திருப்பரங்குன்றத்தில் த.மா.கா., 12ம் ஆண்டு துவக்க விழாவில் முன்னாள் எம்.பி., சித்தன் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாநில செயலாளர் சிவசுந்தரம், மாவட்ட தலைவர் துரைப் பாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜா, நிர்வாகிகள் ஸ்ரீதர், ராமமூர்த்தி, மாணிக்க வாசகம், கொடிகாத்த குமரன், ரவிக்குமார் பங்கேற்றனர்.