கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங் குன்றம், காலை 10:40 முதல் 11:05 மணிக்குள். வருடாந்திர பூஜை: சக்தி விநாயகர் கோயில், மீனாம்பாள்புரம், மதுரை, விநாயகர் பூஜை, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, அன்னதானம், காலை 9:00 மணி முதல். ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி. பக்தி சொற்பொழிவு ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. பெரியபுராணம்: நிகழ்த்துபவர் - மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. கார்த்திகை புராணம் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளுதல் - மீள் உலகிற்கான உணவு, விவசாய ஒருங்கிணைப்பு பற்றிய சர்வதேச மாநாடு: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பாங்காங் ஆசிய பொறியியல் கல்லுாரி பேராசிரியர் அவிஷேக் தட்டா, ஊட்டச்சத்து நிபுணர் கல்பனா, முன்னிலை: முதல்வர் பாத்திமா மேரி, காலை 9:00 மணி. பொது எட்டாவது ஊதியக்குழு தொடர்பாக மத்திய அரசு நியமித்துள்ள கமிட்டி வரையறைக்குள் கிராமிய அஞ்சல் ஊழியர்களை கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்: தலைமை தபால் அலுவலகம், சேதுபதி பள்ளி அருகில், மதுரை, தலைமை: தலைவர் ஆறுமுகம், ஏற்பாடு: அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம், அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், மாலை 5:30 மணி. தேசிய புத்தகத் திருவிழா துவக்க விழா: சவிதாபாய் மேல்நிலைப் பள்ளி, திருநகர், மதுரை, துவங்கி வைப்பவர்: எம்.பி., மாணிக்கம் தாகூர், குத்து விளக்கேற்றுபவர்: மாநகராட்சி கமிஷனர் சித்ரா, பங்கேற்பு: தஞ்சை தமிழ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் திருமலை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் அறம், ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், திருநகர் அனைத்து வியாபாரிகள் நலச் சங்கம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மாலை 5:30 மணி. உசிலம்பட்டி கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் செயற்பொறியாளர் அலு வலகம், உசிலம்பட்டி, பங்கேற்பு: மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி, காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி தொடக்க பள்ளி, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. கண்காட்சி மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி சந்தைப்படுத்தும் சரஸ் மேளா உணவுத் திருவிழா: தமுக்கம், மதுரை, ஏற்பாடு: மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. நீருக்கடியில் அக்வாரியம்: அம்மா திடல், வண்டியூர் டோல்கேட் அருகில், மதுரை, ஏற்பாடு: தி ஓஷன் அமைப்பு, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி வரை. பட்டுச்சேலைகள் கண்காட்சி, விற்பனை: திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி, விற்பனை சங்க கிளைகள், 141, தவிட்டுச்சந்தை, மதுரை, 12, சேர்மன் துளசிராம் 2வது தெரு, மதுரை, ஏற்பாடு: திகோ சில்க்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. தேசிய புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை.