உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிக்ச்சி: மதுரை

இன்றைய நிக்ச்சி: மதுரை

கோயில் ராகு கால பூஜை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, துர்க்கை அம்மனுக்கு அபிஷேகம், அர்ச்சனை, அலங்காரம், தீபாராதனை, காலை 10:30 மணி. ஜெயந்தி, நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, ராம அவதாரத்தில் அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, இரவு 7:00 மணி. ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, ராம அவதாரத்தில் பல்லக்கில் சுவாமி வீதியுலா, காலை 8:00 மணி, வெண்ணைத்தாழி கிருஷ்ணன் திருக்கோலம், மாலை 4:00 மணி, கருட சேவை, இரவு 7:10 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு ஜகம் புகழும் ஜகந்நாதர்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதனகோபால சுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி. திருக்குறள்: நிகழ்த்துபவர் - சந்தானம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதானந்த சிரவனானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. முரளீதர சுவாமி ஜெயந்தி விழா சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஸ்ரீவத்ஸ் பாகவதர், எஸ்.வி.எஸ்., திருமண மண்டபம், காமராஜர் ரோடு, மதுரை, காலை 11:30 மணி. பள்ளி, கல்லுாரி இந்திய வர்த்தகம் குறித்து தேசிய கருத்தரங்கம்: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: செயலர் குமரேஷ், ஏற்பாடு: வர்த்தகத் துறை, காலை 10:30 மணி, என்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில் ரத்த தான முகாம், சிறப்பு விருந்தினர்: மதுரை ஜெயன்ட்ஸ் வெல்பேர் பவுன்டேஷன் யூனிட் இயக்குநர் ஜேசுராஜா, காலை 10:30 மணி. ஸ்ப்ரிங்க்ஸ் 2025 - கலை நிகழ்ச்சிகள்: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, காலை 9:00 மணி, நிறைவு விழா சிறப்பு விருந்தினர்கள்: பெங்களூரு புனித ஜோசப் மாகாணத்தின் தலைவர் லில்லி தொக்கநட்டு, நடிகை ரோஹினி, மதியம் 2:00 மணி. பொது தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் ஆண்டுவிழா: ஐடா ஸ்கட்டர், மதுரை, தலைமை: தலைவர் வேல்சங்கர், சிறப்பு விருந்தினர்: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், மாலை 5:00 மணி. ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்: ஜி.ஆர்.டி., கிராண்ட் ஓட்டல், மதுரை, அறிமுகப்படுத்துபவர்: நடிகை கீர்த்தி ஷெட்டி, ஏற்பாடு: சத்யா நிறுவனம், மாலை 6:00 மணி. விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் பிரவீன் குமார், மதுரை, காலை 10:00 மணி. மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க சிறப்பு கூட்டம்: யூனியன் கிளப் அரங்கம், காந்தி மியூசியம் அருகில், மதுரை, தலைமை: தலைவர் கதிரவன், சிறப்பு விருந்தினர்: பாரா ஒலிம்பிக் தடகள வீரர் கோபி கண்ணன், மாலை 6:30 மணி. இசை நிகழ்ச்சிகள்: ராஜா முத்தையா மன்றம், மதுரை, குரலிசை: முகுந்தன் சாம்ராஜ், மிருதங்கம்: சஞ்சய் வேதாந்த், மாலை 5:45 மணி, பரத நாட்டியம்: சாத்விகா கோபிநாதன், நட்டுவாங்கம்: கோபிநாதன், பாட்டு: சித்ராம்பரி கிருஷ்ணகுமார், மிருதங்கம்: குருபரத்வாஜ், புல்லாங்குழல்: தேவராஜ், ஏற்பாடு: தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், இரவு 7:15 மணி. முன்னேற்ற மேம்பாடு அபிவிருத்தி கூட்டுறவை செயல்படுத்துதல் - கூடலரங்கம்: தானம் அறக்கட்டளை அலுவலகம், கென்னட் குறுக்குத் தெரு, மகபூப்பாளையம், மதுரை, காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி