மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (20.02.2026) மதுரை
20-Feb-2026
கோயில் கும்பாபிஷேகம்:பாண்டுரெங்கன் கோயில், ஹார்விபட்டி, திருநகர், யாகசாலை பூஜைகள், பூர்ணாஹூதி, பிரசாதம் வழங்குதல், மாலை 6:00 முதல் இரவு 9:30 மணி வரை. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, மதியம் 3:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் - டாக்டர் கோகுல்நாத்,சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி. பொது 'ரோட்டரி அடுத்த நுாற்றாண்டின் வழிப்பயணம்' பேச்சாளர் கூட்டம்: ஓட்டல் ஜே.சி.ரெசிடென்சி, லேடிடோக் கல்லுாரி ரோடு, மதுரை, பேசுவர்: ஸ்ரீ ரெங்கநாதன், முன்னிலை: தலைவர் பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: மதுரை ஸ்டார் ரோட்டரி சங்கம், இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி 31வது ஆண்டு விளையாட்டு விழா: சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரி மற்றும் ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, தலைமை கல்லுாரி செயலர் முனைவர் எல்.ராமசுப்பு, சிறப்பு விருந்தினர்: இந்திய மகளிர் கபடி அணி பயிற்சியாளர் கவிதா, மாலை 5:00 முதல் 6:30 மணி. கலைஞர் தமிழ் மன்றம் சார்பில் போட்டிகள், பரிசளிப்பு விழா: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் வானதி, காலை 10:00 மணி. மருத்துவம் இலவச கல்லீரல் பரிசோதனை முகாம்: ரோஸ்பெர்ல் மருத்துவமனை, 67, பாரதி நகர் மெயின் ரோடு, கிருஷ்ணாபுரம் காலனி, மதுரை, ஆலோசனை வழங்குபவர்: டாக்டர் சந்திரன், மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.
20-Feb-2026