உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / அக்.15 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி / அக்.15 க்குரியது 

கோயில் புரட்டாசி திருவிழா: சுந்தரவல்லி அம்மன் கோயில், தேனுார், அம்மன் சிங்க வாகனத்தில் முளைப்பாரி, சக்தி கரகத்துடன் புறப்பாடு, முக்கிய வீதிகளில் பவனி வந்து வைகை ஆற்றில் எழுந்தருளி பெரியஅம்மன் கோயில் வந்து சேருதல், காலை 9:00 மணி, விளக்கு பூஜை, இரவு 7:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவருட்பா : நிகழ்த்துபவர் - பார்வதியம்மாள், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி. பள்ளி, கல்லுாரி மனநலம், கொரிய சமூகம் குறித்த கருத்தரங்கு: பாத்திமா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பாத்திமா மேரி, சிறப்பு விருந்தினர்கள்: தென் கொரியா ஐ.சி.டி., அகாடமி தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் யூன், தலைமை ஆசிரியை மியாங் ஹீ கிம், குளோபல் ஹேம்பியாங் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் காங், ஏற்பாடு: சமூகவியல் துறை, காலை 9:00 மணி. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ஸ்ரீனிவாசன், ஏற்பாடு: என்.எஸ்.எஸ்., குழு, காலை 10:00 மணி. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா: மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சாத்தமங்கலம், மதுரை, பங்கேற்பு: மாநகராட்சி கல்வி அலுவலர் ஜெய்சங்கர், ஆசிரியர் முருகன், காலை 11:00 மணி. கல்லுாரியின் 'எதிர்கால எஸ்.வி.என்.' நிகழ்ச்சி நிறைவு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: தலைவர் கோடீஸ்வரன், காலை 11:15 மணி. கவியரசு கண்ணதாசன் நினைவு விழா முன்னிட்டு, கண்ணதாசன் கவிதைகளில் காதல் சுவை, தத்துவத் தெளிவு தலைப்புகளில் பேச்சுப்போட்டி: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ் உயராய்வு மையம், காலை 9:00 மணி. இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி: வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: மாவட்ட போலீஸ், கல்லுாரி நிர்வாகம், காலை 9:30 மணி. பொது ஆண்டுவிழா போட்டிகள்: மீனாட்சி நிலையம், வசுதாரா வளாகம், ஆண்டாள்புரம், மதுரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி, 'இந்திரஜித்' தலைப்பில் கல்லுாரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, ஏற்பாடு: மதுரைக் கம்பன் கழக அறக்கட்டளை, காலை 9:30 மணி. உலக ஊன்றுகோல் தின விழாவை முன்னிட்டு ஊர்வலம் மனுகொடுக்கும் நிகழ்ச்சி: கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை அருகில், மதுரை, பங்கேற்பு: மாநில உதவிச்செயலாளர் பாரதி அண்ணா, மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஏற்பாடு: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், காலை 10:00 மணி. போலி வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்தும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோயல், லலித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், ஏற்பாடு: பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பாதுகாப்பு கூட்டமைப்பு, காலை 10:00 மணி. காந்தியடிகளும் தாய்மொழியும் காந்தி ஜெயந்தி விழா சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - மதுரை வானொலி நிலைய முன்னாள் முதுநிலை அறிவிப்பாளர் ஞானசம்பந்தன், செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, தலைமை: நான்காம் தமிழ் சங்க செயலாளர் வழக்கறிஞர்மாரியப்ப முரளி, முன்னிலை: முதல்வர் சாந்திதேவி, ஏற்பாடு: காந்தி மியூசியம், கல்லுாரி நிர்வாகம், காலை 10:00 மணி. மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, அனுப்பானடி, மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:30 மணி வரை. விளையாட்டு மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான கல்லுாரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள்: மதுரை கல்லுாரி, தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மாணிக்கம் ராமசாமி கல்லுாரி, சோலைமலை பொறியியல் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், காலை 7:00 மணி. கண்காட்சி மான்சரோவர் ஆடைக் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ராஜஸ்தான் மேளா - பட்டு, காட்டன் சேலைகள், குர்தீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், படுக்கை விரிப்புகள் கண்காட்சி, விற்பனை: ரோட்டரி கிளப் ஆப் மதுரை, விஸ்வநாதபுரம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி: இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி, திருநகர், ஏற்பாடு: நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா, நியூ செஞ்சூரி புக் ஹவுஸ், காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ