மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி / ஜூலை 12க்குரியது
12-Jul-2025
கோயில் 9ம் நாள் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கன்னி லக்னத்தில் சட்டத்தேர் சித்திரை வீதி பவனி, காலை 9:35 முதல் 9:59 மணிக்குள், ராமகிருஷ்ணன், சுப்பிரமணியன் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி, மாலை 5:30 மணி, புஷ்ப விமானத்தில் உலா, இரவு 7:00 மணி, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் சைந்தோபசாரம், இரவு 10:00 மணிக்கு மேல். ஆடிப்பெருந்திருவிழா 4ம் நாள்: அழகர் கோயில், மதுரை, தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:15 முதல் 10:00 மணிக்குள், சுந்தரராஜபெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளல், மாலை 6:00 மணி, இன்னிசைக் கச்சேரி, இரவு 7:00 மணிக்கு மேல். 25ம் ஆண்டு ஆடி உற்ஸவம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேலஅனுப்பானடி, மதுரை, அம்மனுக்கு விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடை யான் கீழமுத்துப்பட்டி, மதுரை, அம்மனுக்கு அன்னாபிஷேகம், மாலை 6:00. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 7:30 முதல் 9:00 மணி வரை. பக்தி சொற்பொழிவு திருமந்திரம்: வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நிகழ்த்துபவர் - திருமாவளவன், ஏற்பாடு : மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. சிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம்: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, காலை 9:00 மணி, 'குருமகிமை' தலைப்பில் சொற்பொழிவு, நிகழ்த்துபவர் - வரலொட்டி ரெங்கசாமி, மாலை 6:30 மணி. சதஸ்லோகி: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி ஆற்றுப்படுத்துதல் நிகழ்வு: ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடிஸ், டி.வி.ஆர். நகர், அருப்புகோட்டை ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: நடிகர், டப்பிங் கலைஞர் ராமநாதன், முன்னிலை: கல்லுாரி இயக்குநர் சுப்ரமணியன், காலை 11:00 மணி. உலக தாய்ப்பால் வார விழா: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பைரவி, ஏற்பாடு: உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, காலை 11:40 மணி. பொது தாய்ப்பால் வார நிகழ்ச்சிகள் - ராஜாஜி அரசு மருத்துவமனை, மதுரை, ஏற்பாடு: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, குழந்தைகள் நலத்துறை, காலை 9:00 மணி முதல். கண்காட்சி ராயல் பர்னிச்சர் எக்ஸ்போ 2025 - மடீட்சியா மகால், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. ஸ்மார்ட் ஹோம் மரச்சாமான்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. கலாஷேத்ரா கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
12-Jul-2025