மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
01-Aug-2025
கோயில் ஆடிப்பெருந்திருவிழா 9ம் நாள்: தேரோட்டம்: கள்ளந்திரி கோயில், அழகர்கோவில், காலை 8:40 மணி முதல் 8:55 மணி வரை, சுந்தரராஜபெருமாள் புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளல், மாலை 6:00 மணிக்கு மேல், வள்ளி திருமணம் நாடகம், இரவு 7:00 மணி. 58ம் ஆண்டு விழா: காளியம்மன் கோயில், பாரதியார் தெரு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, பொங்கல் பானை வைத்தல், விளையாட்டுப் போட்டி, காலை 8:00 மணி, அக்னி சட்டி எடுத்தல், பறவைக்காவடி, அலகு குத்துதல், மதியம்3:00 மணி, ஜனரஞ்சிதா குழுவினரின் இன்னிசை கச்சேரி, இரவு 7:00 மணி. 77ம் ஆண்டு பொங்கல் உற்ஸவம்: விநாயகர் காளியம்மன் கோயில், வீரமுடையான் கீழமுத்துப்பட்டி, மதுரை, கொடி இறக்குதல் மற்றும் முளைப்பாரி கரைத்தல், மாலை 4:00 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்தரை வீதி, மதுரை, காலை 9:00 முதல் மதியம் 10:30 மணி வரை. யஜூர் வேத உபாகர்மா சிறப்பு பூஜை: காஞ்சி காமகோடி மடம், 23, பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, ஹோமம், காலை 7:30 மணி, தெலுங்கு சம்பிரதாயம், காலை 8:50 மணி, உபாகர்மா மூன்றாம் அணி, காலை 10:30 மணி. பக்தி சொற்பொழிவு சுவாமி நிரஞ்ஜனானந்தர் ஜெயந்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. லலிதா ஸகஸ்ரநாம பாராயணம்: சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, ரமணரின் சத்தர்ஸனம், வழங்குபவர் - சுவாமினி பிரசிதானந்த சரஸ்வதி, காலை 9:15 முதல் 10:15 மணி வரை. திருமூலரின் திருமந்திரம்: நிகழ்த்துபவர் - சுப்புராமன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி. பள்ளி, கல்லுாரி விளையாட்டு விழா: எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி, மேலக்குயில்குடி, மதுரை, சிறப்பு விருந்தினர்: சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., அருணாசலம், தலைமை: எஸ்.பி.ஓ.ஏ., கல்விக் குழுமத் தலைவர் நித்திஷ் ஆண்ட்ரெயா ராஜா சிங், காலை 8:30 மணி முதல், ஆண்டு விழா, சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கவுரி, மாலை 5:00 மணி. அறிவியல் மற்றும் புத்தகவியல் ஆராய்ச்சி கருத்தரங்கம்: பாத்திமா கல்லுாரி, மதுரை, பேசுபவர்: மதுரை காமராஜ் பல்கலை கனிம வேதியியல் துறைத் தலைவர் முருகேசன், காலை 10:00 மணி. பொது ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் விழா: வி.எம்.கல்யாண மகால், புது மகாளிப்பட்டி ரோடு, மதுரை, ஏற்பாடு: தமிழக சவுராஷ்டிர முன்னேற்றப் பேரவை, காலை 7:00 மணி முதல். சித்த நவஹரி குருவின் ஆடிப்பூராட ஜெயந்தி: சித்தாஸிரமம், மாரியம்மன், தெப்பக்குளம், மதுரை, சொல்லரங்கம், சித்ததீபம் ஏற்றி விழா துவக்கி வைப்பவர்: ஆட்சிக்குழு உறுப்பினர் விஷ்ணுராம், மாலை 5:30 மணி. அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை: மதுரை நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்கம் மகால், அவனியாபுரம், மதுரை, தலைமை: மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி, சிறப்புரை: சங்கத் தலைவர் கங்காதரன், காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை. நவசமாஜ் சேரிட்டபிள் சொசைட்டி மாவட்டக் கிளை துவக்க விழா: ஜெயா மகால், கூடல்புதுார், மதுரை, தலைமை: பேராசிரியர் அன்பானந்தம், புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம், காலை 10:00 மணி. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியர்கள் சங்கக்கூட்டம்: இ.பி.எப். அலுவலகம், பிபீகுளம், மதுரை, சிறப்புரை: தலைவர் ராஜா, காலை 10:00 மணி முதல். தன்னார்வலர்களுக்கான திறன் வளர் பயிற்சி: பில்லர் ஹால், நாகமலை, மதுரை, ஏற்பாடு: எம்.எஸ்.செல்லமுத்து டிரஸ்ட், காலை 10:00 மணி முதல். கண்ணதாசன் விழா: கண்ணதாசனின் பாட்டுச்சுரங்கம்: நிகழ்த்துபவர் - காவேரி மைந்தன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி. சாதித்த தலித் பெண்கள் பேசுகிறார்கள்: பி.சி.எஸ்., மகால், லேடிடோக் கல்லுாரி அருகில், மதுரை, நோக்கவுரை: செயல் இயக்குநர் கதிர், சிறப்புரை: தமிழ்நாடு பெண்கள் ஆணையம் தலைவர் குமாரி, ஏற்பாடு: எவிடென்ஸ் அமைப்பு, காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை. இசை நிகழ்ச்சி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாடுபவர்கள்: அனஹிதா, அபூர்வா, வயலின்-சம்பத், மிருதங்கம் - ஆனந்தக்கிருஷ்ணன், கஞ்சிரா - ராஜகணேஷ், ஏற்பாடு: ராகப்பிரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி. ஓய்வுபெற்ற கருவூலத்துறையினருக்கான மருத்துவ முகாம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம்:சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை கருவூலத்துறை ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம், தலைமை: சங்க தலைவர் அய்யம்பெருமாள், காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை. தியானம் தியான வகுப்புகள்: வி.எஸ்.செல்லம் செஞ்சுரி மகால், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சன்னியாசிகள், காலை 8:00 முதல் இரவு 8:00 மணி வரை. கண்காட்சி தேசியக் கொடியின் மகத்துவம் குறித்த கண்காட்சி: ரயில்வே ஸ்டேஷன் மேற்கு நுழைவாயில், மதுரை, காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை. கலாஷேத்ரா கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. தொழில் வர்த்தக கண்காட்சி: ராஜ்பாலா மகால், காமராஜர் ரோடு, மதுரை, ஏற்பாடு: சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை. கட்டில், மெத்தை, சோபா உள்ளிட்ட ஸ்மார்ட் ஹோம் மரச்சாமான்களுக்கான கண்காட்சி: ராஜா முத்தையா மன்றம், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
01-Aug-2025