மதுரையில் நாளை அட கடவுளே நாடகம் ஆக.13 ல் என்னடி பெண்ணே
மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சத்குரு சங்கீத சமாஜம் சார்பில் ஆக.2 (நாளை) மற்றும் ஆக.13 ஆகிய நாட்களில் மாலை 6:45 மணிக்கு நாடகங்கள் நடக்கின்றன. நாளை சத்யசாய் கிரியேஷன்ஸ் வழங்கும் மாப்பிள்ளை கணேஷ் குழுவினரின் 'அட கடவுளே' நாடகமும், ஆக.13ல் பி.எம்.ஜி., மயூரப்பிரியா வழங்கும் 'என்னடி பெண்ணே' நாடகமும் நடக்க உள்ளன. மயூரப்பிரியா குழு 2012ல் முத்துக்குமரன், கணபதி சங்கரால் துவங்கப்பட்டது. இதுவரை10க்கும் மேற்பட்ட நாடகங்களை டில்லி, பெங்களூரு, திருச்சி, மதுரை என இந்தியா முழுவதும் வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது. நகைச்சுவையுடன் கருத்துக்களை அள்ளித் தெளிக்கும் இவர்களது நாடகங்கள் ஒவ்வொரு ஆண்டும் 'கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்' நடத்தும் கோடை நாடக விழாவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளன. 2025 மார்ச்சில் கணபதிசங்கரின் மறைவுக்கு பின் அவரது புதல்வர் பிரசாந்த், மருமகள் வைஷாலி ஆகியோர் நாடகத் தயாரிப்புப்பணிகளை கவனிக்கின்றனர்.