உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மனைவிக்கு டார்ச்சர்: தலைமறைவான ஏட்டு கைது

மனைவிக்கு டார்ச்சர்: தலைமறைவான ஏட்டு கைது

மதுரை: மதுரையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த போலீஸ் ஏட்டு பூபாலன் 35, திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.மதுரை காதக்கிணற்றில் வசிப்பவர் பூபாலன். அப்பன்திருப்பதி போலீஸ் ஏட்டு. இவரது மனைவி தங்கப்பிரியா 30. இரு மகன்கள் உள்ளனர். திருமணமாகி 7 ஆண்டுகளான நிலையில் மாமனரான விருதுநகர் மாவட்டம் சாப்டூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோரின் துாண்டுதலில் கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கியதாக போலீசில் புகார் அளித்தார். காயம்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.மனைவியை தாக்கியது குறித்து தங்கையிடம் பூபாலன் பேசிய ஆடியோ வைரலானதால் அவர் விடுமுறை எடுத்துக்கொண்டு தலைமறைவானார். பூபாலன், செந்தில்குமார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று காலை திருப்பூரில் நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த பூபாலனை தனிப்படை போலீசார் மதுரை அழைத்து வந்தனர். அவர் பணியாற்றும் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான சக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

பிரேம்ஜி
ஜூலை 20, 2025 18:33

மாணவிகளுக்கு டார்ச்சர் என்று முதலில் தவறாக படித்து விட்டேன்!


Edwin Jebaraj T, Tenkasi
ஜூலை 20, 2025 14:32

இவன் மனைவியை பலமாக பல முறைகளில் அடித்ததை அவனுடைய தங்கையிடம் கூறும் போது கொஞ்சமும் பதட்டமாகாமல் சிரித்துக் கொண்டே ரசித்து இவளை இப்படியே விட்டால் சரிப்பட்டு வரமாட்டாள் இன்னும் நல்லா அடிண்ணே என்றாளே, இவளைப் போன்றோர்களே குடும்பத்தில் குழப்பமும் உறவில் விரிசலும் அடைய முக்கிய காரணம். இவர்களைப் போன்றவர்களை அடையாளங்கண்டு ஆரம்ப நிலையிலேயே தூர வைத்தால் தான் வாழக் கூடிய குடும்பங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதே உண்மை.


பேசும் தமிழன்
ஜூலை 20, 2025 10:09

மனைவியை கொடுமை செய்த இவன் ...காவல்துறை விசாரணையின் போது வழுக்கி விழுவானா ....இல்லை தப்பித்து தான் ஓடுவானா ....இல்லை குற்றவாளி காவல்துறை சார்ந்த ஆள் என்பதால் ராஜமரியாதை கிடைக்குமா ???


அப்பாவி
ஜூலை 20, 2025 09:46

அந்த ஏட்டு வேலையைப் பறித்து மனைவிக்கு குடுக்கணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை