சுற்றுலா கருத்தரங்கு
மதுரை : மதுரை தியாகராஜர் கல்லுாரியில் மத்திய சுற்றுலாத்துறை சார்பில் மாநிலகருத்தரங்கு நடந்தது. முதல்வர் பாண்டியராஜா வரவேற்றார். மதுரையின் பாரம்பரியம், கலாசாரம் குறித்து கல்லுாரித் தலைவர் உமா கண்ணன் விளக்கினார். சுற்றுலாத்துறை இயக்குநர் வெங்கடேசன் தொழில்முனைவோருக்கான திட்டங்கள், சலுகைகள் குறித்து காணொலியில் பேசினார். மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன், பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல் நிர்வாக அலுவலர் வாசுதேவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லுாரியின் பெண்கள் கற்கை மைய இயக்குநர் அருணா ஏற்பாடு செய்தார்.