பாரம்பரிய நடைபயணம்
மதுரை : மதுரை மாடக்குளம் கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலை அடிவாரத்தில் பாரம்பரிய நடை பயணத்துடன் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.தானம் அறக்கட்டளையின் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிக்கான சுற்றுலா மையம், தமிழ்நாடு சுற்றுலாத்துறை, டிராவல்ஸ் கிளப், இன்டாக் மற்றும் மதுரை நகர்ப்புற களஞ்சியம் ஏற்பாடுகளை செய்தன. வரலாற்று பேராசிரியர் (ஓய்வு) சேதுராமன் பொங்கல் விழாவின் சிறப்புகளையும் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியாவில் கொண்டாடப்படுவதையும் விளக்கினார்.தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் கூறுகையில் ''மாடக்குளம் கண்மாய் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மடைகள் உள்ளன. கண்மாய் குறித்து அய்யனார் கல்வெட்டுகள், ஓலைச்சுவடி, தமிழ் எழுத்துகள் மூலம் அறியலாம். கண்மாயின் மடைகளை பாதுகாத்து தண்ணீர் பாய்ச்ச அவர்களுக்கு பாண்டியர் காலத்தில் மானியங்கள் வழங்கப்பட்டது'' என்றார்.சுற்றுலா ஆலோசகர் பாரதி, ஆனையூர் அரசுப் பள்ளி பசுமை படை ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு பங்கேற்றனர். பங்கேற்றவர்களுக்கு பொங்கல், கரும்பு, பாரம்பரிய உணவு வழங்கப்பட்டது.