உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்க பாரம்பரிய பூச்சுக் கலவை

திருமலை நாயக்கர் மகாலை புதுப்பிக்க பாரம்பரிய பூச்சுக் கலவை

மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலின் நாடகசாலை, பள்ளியறையை புனரமைக்க ரூ.8 கோடி ஒதுக்கிய நிலையில் சுவர்கள், கூரையின் மீது பாரம்பரியமான சுண்ணாம்புக் கலவை பூச்சு நடக்கிறது.பல நுாறு ஆண்டுகளுக்கு முன் சிமென்ட் பயன்பாடில்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்ப முறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது. சுண்ணாம்புக் கல்லை தண்ணீரில் ஊறவைத்து, அதனை சலித்து சுண்ணாம்புப் பால் தயாரிக்கப்படுகிறது. பின்னர் சுண்ணாம்பையும் தண்ணீரையும் தனியாக பிரித்தெடுக்கின்றனர்.ஆற்றுமணலை சலித்து, சுண்ணாம்புடன் சேர்த்து அரவை இயந்திரம் மூலம் நன்கு அரைக்கப்படுகிறது. இது 21 நாட்களுக்கு 'கியூரிங்' செய்யப்படுகிறது. கடுக்காய், கருப்பட்டியை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீருடன் 'கியூரிங்' செய்த கலவை மீண்டும் அரைக்கப்படுகிறது.கடுக்காய், கருப்பட்டி கலந்த தண்ணீரை பழங்கால செங்கல் கட்டட சுவர்களின் மீது தெளித்து கலவையின் முதல் பூச்சு பூசப்படுகிறது. அதன் பின் 3 மாதங்கள் கழித்து 2வது பூச்சு பூசப்பட்டு கடைசியாக சுண்ணாம்புப்பால் கலவையால் சுவர்கள் 'பளபள'ப்பாக்கப்படுகின்றன. இந்த முறையில் பூசப்படும் கலவை நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்கும்.நாடகசாலை, பள்ளி, மியூசியம், மாடத்தின் கூரை வரை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இறுதியாக தட்டோடு பதிக்கப்படும். சுண்ணாம்புக்கல்லில் இருந்து பாலை பிரிப்பது முதல் மணலை அரைப்பது வரை நிறைய வேலை இருப்பதால் பணிகள் முடிவடைய இன்னும் 9 மாதங்களாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

kumaresan
செப் 03, 2024 14:00

மதுரை திருமலை மஹாலில் உள்ள ஆர்கியாலஜி டிபார்ட்மென்ட் மஹாலை மீண்டும் மீண்டும் அழகுபடுத்தி நல்ல சுற்றுலா தலமாக்க பெரும் செலவு செய்கிறது . ஆனால் மதுரை மாநகராட்சியோ மஹாலை சுற்றி மக்கள் குடியிருப்பு பகுதியில் லாரி கோடௌங்களுக்கு அனுமதி அளித்து, குப்பை கிடங்கிகளை அமைத்து கழிப்பிடமாக்கி, சுற்றுலா தளத்தையும் , குடியிருப்பு பகுதியையம் அடியோடு அழிக்க முடிவு செய்துள்ளது,


kumaresan
செப் 03, 2024 11:29

நெடுங்காலமாகவே திருமலைநாயக்கர்பந்தடி முதல் தெருவில், மகாலின் சுற்றுச்சுவர் அருகில் மிகப்பெரிய குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. குப்பைகிடங்குகள்இருப்பதால்,இதற்குஅருகில்பொறுப்பில்லாதபொதுமக்கள்சிறுநீர்கழிப்பதும்வாடிக்கையாகிவிட்டது. இந்தகுப்பை கிடங்கை சுற்றி நாய்களும், மாடுகளும் சுற்றித் திரிகின்றன. மாநகராட்சி ஊழியர்கள் காலையில் இதை மிகுந்த சிரமத்துடன் சுத்தம் செய்கிறார்கள். இருந்தாலும்ஒருசுற்றுலாத்தலத்திற்குஅருகில்குடியிருப்புகள்உள்ளஇடத்தில்,பள்ளிமற்றும்ஆஸ்பத்திரிகள்இருக்குமிடத்தில்இந்தமாதிரிகுப்பைகிடங்கைவைத்துகுப்பைகளைசேகரித்து, அதைபிரித்து ஏடு க்கும் இடமாக இதை உபயோகப்படுத்தக்கூடாது. இந்தகுப்பைகிடங்கைஉடனடியாகவேறுஇடத்திற்குமாற்றவேண்டும்.இந்தஇடத்தில்இருந்துஅரைகிலோமீட்டர்தொலைவில் ரயில்வே பாலம் அருகில் சிந்தாமணி செல்லும்வ ழியில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் இந்த குப்பைகிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றவேண்டும். இந்த இடத்தில் இருந்து அரைகிலோமீட்டர் தொலைவில் ரயில்வேபாலம் அருகில் சிந்தாமணி செல்லும் வழியில் மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதியில் இந்தகுப்பை கிடங்கை மாற்றி குப்பைகளை பிரிக்கும் பணியை மேற்கொள்ளவேண்டும்.இதனால்இந்தப்பகுதிமுழுதும் துர்நாற்றத்தில் இருந்து விடுபட்டு நல்லசுற்றுலாத்தலமாக ,குடியிருப்பு பகுதியாக மாறும். ௨. மஹாலுக்கு சுற்றி கோடௌன்களுக்கு அனுமதியை ரத்து செய்து அவைகளை அருகில் உள்ள சிந்தாமணி ரோடு, ரிங் ரோடு அருகில் லாரி ஓட்டுனர்களுக்கும் சுமை தூக்குபவர்களுக்கும் பாத்ரூம் ,கழிப்பறை மற்றும் சிறு சிறு கடை ஹோடேல்களுடன் இடம் ஒதுக்கி தர வேண்டுமாய் தினமலர் வயிலாக வேண்டிகொள்கிறோம். திருமலை நாய்க்கர் மஹாலை சுற்றி கழிப்பறையாகவும், லார்ரி கோடௌங்களாக மாற்றி தெற்கு வாசலில் இருந்து மஹால் வரை அசிங்கமாக்கி இந்த பகுதி மக்களையும் சுற்றுலா தலமாக இதை ஏற்க மறுத்து , இந்த சுற்றுலா தளத்தை கழிப்பறையாகவும், இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் இருப்பிடமாகவும் மதுரை மாநகராட்சி மாற்றியுள்ளது. லார்ரி கோடௌன் உரிமையாளர்கள் துணையுடன் இதை செய்கிறார்கள் . இதில் மத்திய அரசு நிர்வாகத்திற்கும் மாநகராட்சிக்கு இடையில் ஒத்துழையாமை என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம் . இதை முதலில் செய்தால் தான் திருமலை மஹாலை சீரைமைக்க முடியும் . நன்றி இப்படிக்கு உங்கள் உடனடி உதவியை வேண்டி பந்தடி -முதல் தெரு குடியிருப்பு மக்கள்


சமீபத்திய செய்தி