உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பாரம்பரிய நடைப்பயணம்

 பாரம்பரிய நடைப்பயணம்

மதுரை: தானம் அறக்கட்டளையின் பாரம்பரியம், மேம்பாட்டுக்கான சுற்றுலா மையம், தமிழக சுற்றுலா துறை, மதுரை டிராவல்ஸ் கிளப் இன்டாக், மதுரை வட்டார களஞ்சியம் மகளிர் குழுவினர் சார்பில் மதுரையின் 12 பாரம்பரிய இடங்களுக்கு நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. திருமலை நாயக்கர் மகால், சேதுபதி மருத்துவமனை, பத்துத்துாண், விளக்குத் தூண், கொத்தவால் சாவடி, தேரடி, விட்ட வாசல், வசந்த மண்டபம்,ராய கோபுரம், எழுகடல் வீதி, நகரா மண்டபம், மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களின் வரலாற்று சிறப்புகளை தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம்,பேராசிரியர் சேதுராமன் விளக்கினர். டிராவல்ஸ் கிளப் தலைவர் ராஜ கிரகாம், வட்டார களஞ்சிய ஒருங்கிணைப்பாளர் சுசித்ரா, வட்டார தலைவி செந்தாமரை ஏற்பாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ