கீழவாசல் பகுதியில் போக்குவரத்துக்கு தடை
மதுரை: மதுரை கீழவாசல் அருகே காமராஜர் ரோடு ஆனந்த் மெட்டல் கம்பெனி அருகேயுள்ள கழிவு நீர் கால்வாய் மேற்புற கான்கிரீட் தளம் பழுதடைந்துள்ளது. புதிய தளம் அமைப்பதால் தற்காலிகமாக கீழவாசல் முதல் அரசமரம் பிள்ளையார் கோயில் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. இன்று(ஆக.2) முதல் கீழவாசல், காமராஜர் ரோடு செல்ல வேண்டிய வாகனங்கள் நெல்பேட்டை, முனிச்சாலை ரோடு வழியாக செல்ல வேண்டும். முனிச்சாலை யில் இருந்து கீழவாசலுக்கு வாகனங்கள் வழக்கம் போல் வரலாம்.