உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரையில் இன்று போக்குவரத்து மாற்றம்

மதுரை : ராமேஸ்வரம் பாம்பனில் இன்று (ஏப்., 6) ரயில்வே புதிய பாலம் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். நிகழ்ச்சி முடிந்ததும் ெஹலிகாப்டர் மூலம் மதியம் 3:00 மணிக்கு மதுரை வருகிறார். பின் தனி விமானத்தில் டில்லி புறப்படுகிறார்.பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் காவல்துறை மாற்றம் செய்துள்ளது.வாகன நிறுத்தம் தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள்:n மதுரை விமான நிலையம் முழுவதும் (அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர).n மதுரை விமான நிலையம் முதல் மண்டேலா நகர் சந்திப்பு வரை.n பெருங்குடி சந்திப்பிலிருந்து அவனியாபுரம் பைபாஸ் ரோடு ஹர்ஷிதா மருத்துவமனை சந்திப்பு வரை.n மண்டேலா நகர் சந்திப்பிலிருந்து விரகனுார் ரவுண்டானா சந்திப்பு வரை.

வாகன போக்குவரத்து மாற்றம்

n மேலுார், விரகனுார் ரிங்ரோடு வழியாக கப்பலுார் பாலம் சென்று திருநெல்வேலி, தென்காசி, விருதுநகருக்கு செல்லும் லாரிகள் கொட்டாம்பட்டி, நத்தம், சத்திரப்பட்டி, அலங்காநல்லுார், தனிச்சியம் பிரிவு, திண்டுக்கல் நான்குவழிச்சாலை, துவரிமான் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலை வழியாக கப்பலுார் பாலம் சென்று திருமங்கலம் பைபாஸ் சாலை வழியாக செல்லலாம்.n மேலுார், விரகனுார் ரிங்ரோடு, மண்டேலா நகர் வழியாக அருப்புக்கோட்டை, துாத்துக்குடி செல்லும் லாரிகள் கொட்டாம்பட்டி, நத்தம், சத்திரப்பட்டி, அலங்காநல்லுார், தனிச்சியம் பிரிவு, திண்டுக்கல் நான்குவழிச்சாலை, துவரிமான் சந்திப்பு, நாகமலை புதுக்கோட்டை நான்கு வழிச்சாலை வழியாக கப்பலுார் பாலம், கள்ளிக்குடி சென்று இடது புறம் திரும்பி அருப்புக்கோட்டை செல்லலாம்.n மேலுாரிலிருந்து விரகனுார், கப்பலுார் பாலம் சென்று திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் செல்லும் கார்கள் அழகர்கோவில், சத்திரப்பட்டி, அலங்காநல்லுார், தனிச்சியம் பிரிவு, திண்டுக்கல் நான்குவழிச்சாலை வழியாக நாகமலை புதுக்கோட்டை நான்குவழிச்சாலை கப்பலுார் பாலம் சென்று, திருமங்கலம் பைபாஸ் சாலை வழியாக அல்லது திருமங்கலம் நகருக்குள் நுழைந்து செல்லலாம்.n மேலுாரிலிருந்து நான்கு வழிச்சாலை வழியாக சிவகங்கை, ராமநாதபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒத்தக்கடை, திருவாதவூர், பூவந்தி, திருப்புவனம் வழியாக செல்லலாம்.n சிவகங்கை சாலையிலிருந்து மதுரை வரும் வாகனங்கள் அனைத்தும் பூவந்தி, திருவாதவூர், இடையபட்டி, சித்தாக்கூர், திருமோகூர், ஒத்தக்கடை வழியாக செல்லலாம்.n ராமநாதபுரம் சாலையிலிருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் திருப்புவனம், நரிக்குடி, அருப்புக்கோட்டை சாலை வழியாக செல்லலாம்.n அருப்புக்கோட்டை சாலையிலிருந்து வரும் வாகனங்கள் பாரப்பத்தி, கூடக்கோவில், அச்சங்குளம், மைக்குடி, மேலக்கோட்டை, திருமங்கலம் மற்றும் நான்கு வழிச்சாலை வழியாக செல்லலாம்.n மதுரை மற்றும் மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்டிலிருந்து அருப்புக்கோட்டை சாலை வழியாக திருமங்கலம் செல்லும் அனைத்து வாகனங்களும் மதுரை நகருக்குள் திருப்பரங்குன்றம் சாலை வழியாக திருமங்கலம் செல்லலாம்.n காலையில் மதுரை விமான நிலையம் செல்லக்கூடிய அனைத்து பயணிகள் மற்றும் அவர்களுக்கான வாகனங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே அங்கு செல்ல வேண்டும்.n விமான நிலையத்திற்கு வாகனத்தில் வரும் பயணிகள் வாகன வழித்தட எண் 2-ல் மட்டுமே பயணிகளை இறக்கிவிட அல்லது ஏற்றிக்கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். பயணிகளை ஏற்றிச்செல்ல மற்றும் இறக்கிவிட வரும் வாகனங்களின் டிரைவர்கள் பயண சீட்டின் நகலை (சாப்ட் காப்பி) தனது அலைபேசியில் வைத்திருக்க வேண்டும்.n முக்கியஸ்தர் செல்லும் விரகனுார் ரிங்ரோடு, விமான நிலைய சாலை மற்றும் மண்டேலாநகர் சந்திப்பிலிருந்து விமான நிலையம் வரையுள்ள சாலைகளில் கட்டுமானம் தொடர்புடைய (மணல், ஜல்லி, கம்பி, மரவேலைப்பாடு) பொருட்களை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ