மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
4 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
4 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
5 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
5 hour(s) ago
உசிலம்பட்டி: விசேஷ தினங்களில் வாகன நெரிசலால் உசிலம்பட்டி நகரே ஸ்தம்பிக்கிறது. இதனை தவிர்க்க புறவழிச்சாலை பணிகளை விரைவில் துவக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தினர்.உசிலம்பட்டி மதுரை ரோட்டில் கண்ணன் தியேட்டரில் இருந்து பழைய தாலுகா அலுவலகம் வரையிலுள்ள ரோடு மிகவும் குறுகலாக உள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் மதுரை - தேனி ரோட்டில் நடக்கிறது. பஸ்ஸ்டாண்ட் விரிவாக்க பணிக்காக தேனி ரோட்டில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் அமைக்கப்பட்டுள்ளது.மதுரை, தேனி, வத்தலகுண்டு, பேரையூர் ரோடுகளில் விசேஷ நாட்களில் அதிகமாக வரும் வாகனங்களால் எந்த ரோட்டிலாவது போக்குவரத்து தடை ஏற்பட்டால் அது நகர் முழுவதும் எதிரொலிக்கிறது. நகரின் நான்கு வழித்தடத்திலும் வாகன நெரிசலை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே, விரைவில் புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தினர்.
4 hour(s) ago
4 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago