உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சந்தை வாகனங்களால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

சந்தை வாகனங்களால் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து

மேலுார்: மேலுார் சந்தையில் கால்நடைகளை ஏற்ற வரும் வாகனங்களை ரோட்டின் இருபுறங்களிலும் நிறுத்துவதால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது.மேலுார் நகராட்சி சந்தைப் பேட்டையில் ஆடு, மாடுகை விற்பனை செய்ய சந்தை நடக்கிறது. தாலுகா முழுவதிலும் இருந்து கொண்டுவரும் கால்நடைகளை வாங்கிச் செல்ல மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட வியாபாரிகள் வருகின்றனர். தீபாவளி, ரம்ஜான் உள்பட பண்டிகை காலங்களில் பல ஆயிரம் கால்நடைகள் வருவதும், கோடிக் கணக்கில் வியாபாரம் நடப்பதும் வழக்கமாகி விட்டது. இங்கு வரும் கால்நடைகளை, ஏற்றிச் செல்ல வரும் வாகனங்கள், மெயின் ரோட்டில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கிறது.சமூக ஆர்வலர் சிவா கூறியதாவது: சந்தைக்குள் நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி கால்நடைகளை ஏற்றுவதற்கு வசதி உள்ளது. இருப்பினும் வாகன ஓட்டிகள் ரோட்டின் இருபுறமும் குறுக்கு நெடுக்காக வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். அதனால் ஆம்புலன்ஸ், பள்ளி பஸ்கள், கனரக வாகனங்கள் ரோட்டில் செல்ல முடியாமல் ஸ்தம்பித்து நிற்கின்றன. போக்குவரத்து நெரிசலால் நோயாளிகள் உரிய நேரத்திற்கு மருத்துவமனை செல்ல முடியவில்லை. பள்ளி, பஸ்களில் வேலைக்கு செல்ல முடியவில்லை. எனவே, ரோட்டில் வாகனங்களை நிறுத்தாமல் சந்தைக்குள் நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி