உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இடவசதி இல்லாத சேர் கார் பெட்டிகள் ரயில் பயணிகள் அதிருப்தி

இடவசதி இல்லாத சேர் கார் பெட்டிகள் ரயில் பயணிகள் அதிருப்தி

மதுரை: ரயில்களில் ஏ.சி., அல்லாத சேர் கார் பெட்டிகளின் இருக்கைகள் போதிய இடவசதியின்றி அசவுகரியமாக இருப்பதாக பயணிகள் அதிருப்தி தெரிவித்தனர்.முன்பதிவு செய்யப்பட்ட 2ம் வகுப்பு சேர் கார் பெட்டிகள் வைகை, பல்லவன் உள்ளிட்ட ரயில்களில் உள்ளன. முன்பு ஐ.சி.எப்., சேர் கார் பெட்டிகள் இருந்தபோது அனைத்து இருக்கைகளும் சேர்ந்த முறையில் இருந்தன. இதனால் பயணிகளுக்கு இடவசதி இருந்தது. தற்போது எல்.எச்.பி., பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டபின் சேர் கார் பெட்டிகளின் இருக்கைகள் இருபுறமும் மூன்று பேர் அமரும் வகையில் பெரும்பாலும் தனித்தனி இருக்கைகளாக உள்ளன. இவ்விருக்கைகள் குறுகலாக உள்ளதால் நெடுந்துாரம் பயணிப்போருக்கு அசவுகரியம் ஏற்படுவதாக பயணிகள் தெரிவித்தனர்.ரயில் பயணி சீனிவாசன் கூறியதாவது: ஏ.சி., சேர் கார் பெட்டிகளில் ஒருபுறம் இரண்டு இருக்கைகளும், எதிர்புறம் மூன்று இருக்கைகளும் உள்ளதால் விசாலமாகவும், கால்கள் வைக்க போதிய இடவசதியுடனும்உள்ளன. ஏ.சி., அல்லாத சேர் கார் பெட்டிகளில் உள்ள இருக்கைகள் தனித்தனியாக குறுகலாக உள்ளதால் மூன்று பேர் பயணிக்க வேண்டியஇடத்தில் இருவர் மட்டுமே அமர்ந்து செல்லும் நிலையுள்ளது. கால்கள் வைக்கவும் போதிய இடவசதி இல்லை.ஒரு சில பெட்டிகளில் தனித்தனி இருக்கைகளாக பிரிக்கப்படாமல் உள்ளது. அவ்வகை இருக்கைகளில் பயணிகளுக்கு ஓரளவு இட வசதி கிடைக்கிறது. அனைவரும் சிரமமின்றி அமர்ந்து பயணிக்கும் வகையில் இருக்கைகளின் அமைப்பை ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 03, 2024 10:32

இந்தியன் ரயில்வேக்கு மக்களிடம் கொள்ளையடிக்கவே நேரமில்லை. மக்களின் பிரச்சனையை எங்கே பார்க்கப்போகிறார்கள்?


சமீபத்திய செய்தி