பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி தொழில் வழிகாட்டு மையம், ஸ்டார் பிரண்ட்ஸ் டிரஸ்ட், விநாயக் இன்ஸ்டிடியூட் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., அரசு தேர்வுகளுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் கல்லுாரியில் நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் தங்கமணி, இன்ஸ்டிடியூட் நிறுவனர் முரளி மணி ரங்கராஜ், ஏசியன் த்ரோபால் பவுண்டேஷன் தலைவர் ராமேஸ்வரன், வருமானவரித்துறை அதிகாரி சந்திரசேகர், இந்தியன் பிரஸ் கிளப் தலைவர் சாம் திவாகர், மகாத்மா ஓமியோ ரிசர்ச் சென்டர் தலைவர் டாக்டர் தனபால் பேசினர். ஸ்டார் பிரண்ட்ஸ் நிறுவனர் குருசாமி நன்றி கூறினார்.