ரோட்டின் நடுவே டிரான்ஸ்பார்மர்
சோழவந்தான்: முள்ளிப்பள்ளத்தில் ரோட்டின் நடுவே அமைந்துள்ள டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர். மார்நாட்டான்: இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தென்கரை - குருவித்துறை ரோட்டில் சங்கையா கோயில் அருகே டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் ரோடு அகலமாகிவிட்டது. ஏற்கனவே அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் ரோட்டின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. குருவித்துறை குருபகவான், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஏராளமான வாகனங்கள் இவ்வழியே செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அரசு இடம் அருகே இருப்பதால் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மரை மாற்றியமைக்க வேண்டும் என்றார். உதவி மின் பொறியாளர் பாலாஜியிடம் கேட்டபோது, 'விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.