உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

 மரக்கன்றுகள் பராமரிப்பு பணி

ஒத்தக்கடை: உயர்நீதிமன்ற மதுரை கிளை அருகில், யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் மரக்கன்றுகளுக்கான பராமரிப்பு பணி நடந்தது. தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். உறுப்பினர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். தமிழ் இலக்கியா வரவேற்றார். மரங்களுக்கு பராமரிப்பு பணி, கவாத்து பணி, நீர் ஊற்றும் பணி நடந்தது. மரங்களில் இருந்த ஆணிகள், பெயர் பலகைகள் அகற்றப்பட்டன. போக்குவரத்திற்கு இடையூறான மரக்கிளைகள் சரி செய்யப்பட்டன. நிகழ்வில் அஞ்சலக பணியாளர் பிரேம், பாஸ்கரன், பசுமை சாம்பியன் அசோக்குமார், தமிழாசிரியர் கார்த்திக், ராகேஷ், பாண்டி, ஸ்டெல்லா மேரி, ஐஸ்வர்யா, சந்திரா, அரிய நட்சத்திரா, நிலாஸ்ரீ, பிரசீத், ஜெய்சீத், பாரதி பங்கேற்றனர். மாணவர் ரூபன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை