மேலும் செய்திகள்
பூங்காவில் மரக்கன்றுகள் பராமரிப்பு பணி
19-May-2025
மதுரை : மதுரை ஒத்தக்கடையில் யானைமலை கிரீன் அறக்கட்டளை சார்பில் உலக பெருங்கடல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா தலைமையாசிரியர் தென்னவன் தலைமையில் நடந்தது.அறக்கட்டளை ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். உறுப்பினர் பாலமுருகன் வரவேற்றார். உலக பெருங்கடல் நாள் குறித்து தென்னவன் விளக்கினார். பெருங்கடல், அதன் ஆதாரங்களைப் பாதுகாக்க தனிப்பட்ட, சமூக ஒருங்கிணைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின் மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆலோசகர்கள் ராகேஷ், பாண்டி, பரமேஸ்வரன், ரமேஷ், அப்துல் கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் செந்தில் பசுமைச் சாம்பியன் அசோக்குமார், உறுப்பினர்கள் ஸ்டெல்லா மேரி, நட்சத்திரா, கபிலன் பங்கேற்றனர்.மாணவர் பென்னி குக் நன்றி கூறினார்.
19-May-2025