மரக்கன்றுகள் குளிர்விப்பு
மதுரை: மதுரை ஒத்தக்கடை முதல் திருமோகூர் வரை தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை குளிர்விக்கும் நிகழ்ச்சி யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில் நடந்தது. எல்.கே.பி., நகர் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார். ஆலோசகர் பிரபு முன்னிலை வகித்தார். ஆலோசகர் பாலமுருகன் வரவேற்றார். மரக்கன்றுகளை பராமரிப்பது குறித்து பசுமை சாம்பியன் அசோக் குமார் பேசினார். ரோட்டின் இருபுறமும் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றப்பட்டது. பராமரிப்பு, கவாத்து பணி நடந்தது. உறுப்பினர் ஐஸ்வர்யா நன்றி கூறினார். நிர்வாகி பாஸ்கரன், தமிழாசிரியர் கார்த்திக், தட்டச்சு பயிற்சி நிறுவன உரிமையாளர் ஜெயபாலன் பங்கேற்றனர்.