உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்

டி.ஆர்.இ.யூ., ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் (டி.ஆர்.இ.யூ.,) சார்பில், தொழிற்சங்க உரிமையை பறிப்பதாகக் கூறி, தெற்கு ரயில்வே நிர்வாகத்தை கண்டித்து, ஓபன்லைன் பிரிவு செயலாளர் சேதுக்கரை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொதுக்கிளை உதவிச் செயலாளர் லட்சுமணசாமி முன்னிலை வகித்தார். கோட்டச் செயலாளர் சிவக்குமார், உதவித் தலைவர் ஜெயராஜசேகர், ஓபன்லைன் தலைவர் வீரணசுரேஷ், ஒருங்கிணைப்பாளர் ஹரிகுமார், கோட்ட அலுவலக கிளை பொருளாளர் பார்த்தசாரதி, ஓய்வூதியர் சங்க (டி.ஆர்.பி.யூ.,) கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் பேசினர். பொருளாளர் ஜெயராமன் நன்றி கூறினார். தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தலில் வென்ற டி.ஆர்.இ.யூ.,வுக்கும் சமமான கிளைகள் ஒதுக்க வேண்டும். தொழிலாளர்களின் குறை கேட்டு, நிர்வாகத்திடம் முறையிட்டு தீர்வுகாண, தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும். காலியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8வது ஊதியக்குழு அமலாகும் வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் 30 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ