உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தொகுதி பிரச்னைக்கு சென்னையில் இருந்து தீர்வு கண்ட த.வெ.க., எம்.எல்.ஏ.,

 தொகுதி பிரச்னைக்கு சென்னையில் இருந்து தீர்வு கண்ட த.வெ.க., எம்.எல்.ஏ.,

மதுரை: மதுரை கிழக்கு தொகுதியில் ஏற்பட்ட கழிவுநீர் பிரச்னைக்கு சென்னையில் பதவியேற்ற நிலையில், மாநகராட்சி கமிஷனரை தொடர்பு கொண்டு த.வெ.க., எம்.எல்.ஏ., கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்தார். இத்தொகுதியைச் சேர்ந்த ஆ.கருப்பையாபுரம் பனங்காடி 4வது வார்டில் பல நாட்களாக சாக்கடை அடைப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று அப்பகுதி சிறுவர்கள் கழிவுநீர் அடைப்பை சுத்தம் செய்ய முயன்றனர். இதுகுறித்த வீடியோ தொகுதி எம்.எல்.ஏ., கார்த்திகேயனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று அவர் சட்டசபையில் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நிலையில், புகார் வீடியோவை பார்த்தார். அதனை, உடனே மதுரை மாநகராட்சி கமிஷனர் அலைபேசி எண்ணுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார். சில நிமிடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சாக்கடை அடைப்பை சுத்தம் செய்து, அப்பகுதி சுகாதார சீர்கேடையும் சரிசெய்தனர். இதுகுறித்த போட்டோக்கள், வீடியோவை சென்னையில் இருந்த எம்.எல்.ஏ.,வுக்கு அனுப்பி வைத்தனர். பதவியேற்ற போதோ, பொதுமக்களிடம் பெற்ற (முதல்) புகாருக்கு தீர்வுகண்ட கார்த்திகேயனின் செயல்பாடு வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை