மேலும் செய்திகள்
கோமங்கலம்புதூர் மின் தடை
19-Jul-2026
திருமங்கலம்: திருமங்கலம் – உசிலம்பட்டி ரோட்டில் மதுரை – விருதுநகர் நான்கு வழிச்சாலையை கடந்து செல்வதற்காக திருமங்கலம் மின் மயானம் அருகே அண்டர் பாஸ் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்களால் பாலம் சேதமடைவதை தடுக்க உயர கட்டுப்பாட்டு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. அதன்மீது நேற்று முன்தினம் இரவு சென்ற வாகனங்கள் மோதியதில் இரும்பு தடுப்பு இரண்டாக பிளந்து ரோட்டில் விழுந்தது. நேற்று இரும்பு தடுப்புகளை நெடுஞ்சாலைத் துறையினர் அப்புறப்படுத்தி ரோட்டின் ஓரமாக வைத்தனர். விரைவில் சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.
19-Jul-2026