மேலும் செய்திகள்
மாநில மகளிர் குழுப் போட்டி
13-Jan-2025
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டி யாதவா கல்லுாரியில் நடந்தது. ஆறு கல்லுாரிகளின் அணிகள் கலந்து கொண்டன. போட்டியில் மீனாட்சி அரசினர் கல்லுாரி முதலிடத்தை இரண்டாவது ஆண்டாக தக்க வைத்தது. திண்டுக்கல் ஜி.டி.என். கல்லுாரி 2ம் இடம், யாதவா கல்லுாரி 3ம் இடம், லேடிடோக் கல்லுாரி 4ம் இடம் பெற்றன.யாதவர் கல்லுாரி, மீனாட்சி கல்லுாரி, விருதுநகர் வி.எச்.என்.எஸ். கல்லுாரி உடற்கல்வி இயக்குநர்கள் எட்வர்டு நெல்சன், ரமேஷ், முருகேசன் ஏற்பாடுகளை செய்தனர். முதலிடம் பெற்ற மாணவிகளை முதல்வர் வானதி, பயிற்சியாளர்கள் சிவசிதம்பரம், ஈஸ்வரன் பாராட்டினர்.
13-Jan-2025