உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அமைப்பு சாரா தொழிலாளர் மனு

அமைப்பு சாரா தொழிலாளர் மனு

மதுரை: அரசியல் சாசன தினத்தையொட்டி அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் மனு கொடுத்தனர். அதில், மத்திய அரசின் 44 சட்டங்களை ரத்து செய்து கொண்டு வந்த 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மத்திய அரசு முத்தரப்பு மாநாட்டை உடனே கூட்ட வேண்டும், அதில் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் அழைக்கப்பட வேண்டும். கை பூ வேலை தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டத்தில் தனிநலவாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் ரங்கராஜ், சசிகலா, மாநில ஒருங்கிணைப்பாளர் கிளாரா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கில்டாமேரி, வீட்டுவேலை தொழிலாளர் சங்க மாவட்ட தலைவி பானுமதி, தமிழ்மாநில கட்டட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பாலமுருகன், முத்துச்சாமி, அமைப்பு சாரா தொழிலாளர் சங்க நிர்வாகி ஜெயா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !