பதியப்படாத இல்லங்கள் விடுதிகளுக்கு ஒரு மாதம் கெடு
மதுரை : மதுரையில் பதிவு பெறாமல் இயங்கும் இல்லங்கள், விடுதிகள் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்படுவதாக கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது: குழந்தைகள் காப்பகம், முதியோர், மனவளர்ச்சி குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், போதை மறுவாழ்வு இல்லங்கள், பெண்கள் விடுதிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு செயல்பட வேண்டும். பதிவு செய்யாத இல்லங்களுக்கு ஒருமாத அவகாசம் வழங்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் 'சீல்' வைக்கப்படும் என எச்சரித்தார். குழந்தைகள் இல்லம் dsdcpimms.tn.gov.in, முதியோர் இல்லம் seniorcitizenhomes.tnsocialwelfare.tn.gov.in, மனவளர்ச்சி குன்றியவர், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் scd.tn.gov.in, பெண்கள் விடுதி tnswp.com, மறுவாழ்வு மையம், மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லம் tnhealth.tn.gov.in/tngovin/dme/dme.php ஆகிய தளங்களிலோ அல்லது சம்பந்தப்பட்ட நல அலுவலகங்கள் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.