உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயன்படுத்தாமல் பாழடையும் பாலம்

பயன்படுத்தாமல் பாழடையும் பாலம்

சமயநல்லுார்: பரவை, துவரிமான் வைகையாற்று பாலம் பயன்படுத்தாமலேயே பாழடைந்து வருகிறது. இங்கு 5 ஆண்டுகளுக்கு முன் ரூ. பல கோடி மதிப்பீட்டில் பரவை, துவரிமானை இணைக்க வைகையாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. பரவைப் பகுதியில் திட்டமிடாமல் கட்டப்பட்டதால் தார் ரோடு அமைக்காமல் மண்ரோடாகவே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாவதுடன் வாகன சக்கரங்கள் மண்ணில் புதைக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் இந்த வழியை புறக்கணிக்கின்றனர். டூவீலரில் செல்வோர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். எப்போதாவது கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் பாலத்தின் நடு ரோட்டில் கான்கிரீட் பெயர்ந்து கம்பிகள் வெளியில் தெரிகின்றன. இவை வாகனங்களின் டயர்களில் சேதம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. டூவீலர்கள் சிக்கி விபரீதம் விளைய வாய்ப்புள்ளது. முறையாக திட்டமிடாமல் கட்டிய பாலத்தால் அரசு நிதி வீணடிக்கப்படுவதாக, அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !