உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உப்போடைப்பட்டியில் ஒரு வசதியுமில்லையே தனித்தீவு கிராமம்

உப்போடைப்பட்டியில் ஒரு வசதியுமில்லையே தனித்தீவு கிராமம்

மேலுார்: உப்போடைபட்டியில் வசிக்கும் மக்களுக்கு பஸ் உள்பட எவ்வித அடிப்படை வசதியும் இல்லாததால் பிற கிராமங்களுடன் தொடர்பின்றி தனித்தீவில் வசிப்பது போல் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.கிடாரிப்பட்டி ஊராட்சி உப்போடைபட்டியில் 800 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு இதுவரை பஸ் வசதி கிடையாது. அதனால் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எல்லா தேவைகளுக்கும் 2 கி.மீ., தொலைவில் உள்ள மெயின் ரோட்டுக்கு வந்து காத்திருந்து பஸ்சை பிடித்துச் செல்கின்றனர்.இதனால் கல்வி, வேலைவாய்ப்பு, நகர்பகுதியில் கூலி வேலை என அழகர்கோயில், கிடாரிப்பட்டி, செட்டியார் பட்டி பகுதிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். கிராமத்தில் பஸ் வசதி மட்டுமின்றி, தெருவிளக்குகூட இல்லாததால் இரவில் அச்சத்துடனே உள்ளனர்.அவ்வூரைச் சேர்ந்த செல்வம் கூறியதாவது: பஸ் வசதி இன்றி அழகர்கோவில் மலையடிவாரம் தனித்தீவில் வசிப்பது போல் உணர்கிறோம்.மெயின் ரோடுக்கு செல்லும் தார் ரோடு பெயர்ந்து ஜல்லிக் கற்கள் பரவிக் கிடப்பதால் பாதசாரிகள் காலில் காயமடைகின்றனர். இங்கு கல்லுாரி படிப்பு முடித்தோரும் வேலை இன்றி கூலி வேலைக்கு செல்கின்றனர். ஆம்புலன்ஸ் தேவைக்கும்கூட நோயாளிகளை 2 கி.மீ., சுமந்து சென்று, பஸ்சைப் பிடித்து 12 கி.மீ., தொலைவில் உள்ள மேலுார் செல்கிறோம். தெரு விளக்குகள் இல்லாததால் திருட்டு, விஷப்பூச்சிகள் குறித்த பயத்துடனே ஊருக்கு திரும்புகின்றனர். கலெக்டர் கிராமத்தை ஆய்வு செய்து வேலைநாட்களில் தினமும் 2 முறை பஸ் வந்து செல்லவும், அடிப்படை வசதிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை